ரியாத் நகரில் திடீர் மழை..

சவுதி அரேபியா ரியாத் நகரம் கடந்த ஒரு மாத காலமாகவே வித்தியாசமான தட்ப வெப்ப நிலையை சந்தித்து வருகிறது.
கடந்த மூன்று வாரங்களாகவே வெயில் அதிகரித்தும், காற்றும் பலமாக வீசி வந்தது. திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு பாலைவனத்தில் ஏற்றபட்ட காற்றினால், ரியாத் நகர் முழுவதும் தூசி படலத்தில் மூழ்கியது.
 
இந்நிலையில் இன்று (25-04-2018) காலை முதலே தூறலுடன் சில இடங்களில் தொடங்கிய மழை, காலை 10.30 மணி முதல் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையாக பெய்ய தொடங்கியது.  33 டிகிரி வெப்பநிலையில் இருந்தது 20வரை குறைந்துள்ளது.
 
மேலும் இந்த மழையினால் ரியாத் நகரை சூழ்ந்திருந்த தூசி படலம் மறையும் என மக்கள் மனதில் ஆறுதல் ஏற்பட்டுள்ளது.  இம்மழை மிதமாக இன்னும் மூன்று நாட்களுக்கு தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!