தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று 15.03.17 பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மற்றும் சிவகங்கை அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, காஞ்சிரங்கடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், பரவலாக மழை பெய்தது. கீழக்கரையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பாகவே பல வீடுகளில் தற்போதே கிணறுகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. இப்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாசேத்தி உள்ளிட்ட பகுதிகளில் காலை பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் திடீரென வெளுத்து வாங்கிய மழையில் முழுக்க நனைந்தபடி சென்றனர். மேலும் தமிழகத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், தற்போது தென் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









