சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொது மக்கள் அவதி..

சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி..

சோழவந்தான் ரயில்வே கேட் முன் அறிவிப்பு இன்றி மூடியதால் அன்றாட வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது மட்டும் அல்லாது ரயில்வே கேட்டுக்கு வடபகுதியில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய அன்றாட தேவைக்கும் அடிப்படை தேவைக்கும் தென்பகுதிக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது இவர்கள் பெரும்பாலும் நடந்து செல்லக் கூடியவர்கள். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தற்போது திடீரென்று முன் அறிவிப்பு இன்றி ரயில்வே கேட்டை மூடியதால் பல்வேறு மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். ரயில்வே கேட் மூடியது தெரியாமல் இருபுறமும் மக்கள் ரயில்வே கேட்டுக்குள் புகுந்து தண்டவாளத்தை ஆபத்து அறியாமல் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிர் சேதம் நடக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் இவர்களுக்கு நடந்து செல்வதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து தரும்படி இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!