மதுரை ரயில் பெட்டி தீ விபத்து குறித்து இன்று தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ய விசாரணை..

மதுரை ரயில் நிலையம் அருகே யார்டு பகுதியில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில்  தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் விபத்து தொடர்பாக 2 ஆவது நாளாக தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து  ரயில்வே பராமரிப்பு பணி பொறியாளர்கள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக இன்று தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்துகிறார்.

முன்னதாக மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் ஏற்பட்ட பொழுது ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்ற 5 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினரை மீட்டுவந்த நிலையில் தப்பியோடிய 3 பேர் மட்டும் தற்போது மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி முன்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

அதற்காக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட  அரங்கில் இன்று  தீ விபத்து சம்பவம் தொடர்பாக  விசாரணையை நடைபெற உள்ளது..

இந்த விசாரணையின் போது தீ்விபத்து சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்கள், ஆவணங்களை வழங்க விரும்பும் பொதுமக்களும் இந்த விசாரணையின்போது தகவல் அளிக்கலாம்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!