ரயில்வே ஊழியர் கூட்டுறவு நாணய சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறு வாக்குப் பதிவு..

இராமநாதபுரம், ஆக.21 –

திருச்சியை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு நாணய சங்க (மண்டலம் – 3) நிர்வாகிகள் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. மண்டலம் 3ல் பொது 2 பெண் 1, பட்டியல் இனம் 1 என 4 டைரக்டர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங், தட்ஷின் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் ஆகிய 3 தொழிற்சங்க நிர்வாகிகள் களத்தில் உள்ளனர்.

திருச்சி, திண்டுக்கல், மதுரை,  காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், போடி என 13 மையங்களில் தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய மையங்களில் 100க்கும் மேற்பட்டோர் மண்டபம், ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி மையங்களில் 200 க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருச்சி தலைமை அலுவலகம் எடுத்து செல்லப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் ரயில் பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!