சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்து கோரிக்கை

சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளர் . ஆர். என். சிங் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ர‌யி‌ல் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை.2சமீபத்தில் கட்டிய புதிய ரயில்வே பாலத்தில் வளைவு பகுதியில் அகலம் இல்லாத அதை அகலப்படுத்த வேண்டும், இரணியல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் பேருந்துகள் சரியாகத் திரும்ப முடிவதில்லை,3.அது போல் ஏற்கனவே ரயில்வே ஆற்று மேம்பாலம் 230ல் இருந்து பஸ் செல்லும் பாதையில் வளைவு உள்ளது. ரயில்வேயின் புதிய திட்டத்தின்படி, ஹேர்பின் வளைவில் போதிய அகலம் இல்லாததால், பேருந்து சிரமம் ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்படலாம் எனவே அந்த பகுதியிலும் போதுமான அகலத்துடன் வளைவு சாலை சாலை அமைக்க வேண்டும்.
4.வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையான 16729/30 புனலூர் மதுரை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், இதனால் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து வெள்ளாங்கண்ணி மற்றும் திருநள்ளாறு ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.5. மேலும் தினசரி பயணிகளின் நலனுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் பாசஞ்சர்/மெமுவில் ஏதேனும் ஒன்றை காலை மற்றும் மாலை 2 முறை திருநெல்வேலிக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!