இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முறையற்ற பயணத்தால் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்.

சென்னையிலிருந்து மதுரை வரும் 12635 எண் கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத நபா்களும் டிக்கெட் இல்லாத ஆட்களும் பயணிப்பதால் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கை இல்லாமல் நின்று கொாண்டே பயணம் செய்ய வேண்டியுள்ளது.குறிப்பிட்ட பெட்டிகளில் இரயில்வே பாதுகாப்பு காவால்துறையினா் யாரும் இல்லை.முன்பதிவு செய்யாத நபா்கள் 2000ற்கும் மேற்பட்ட ஆட்கள் இருப்பதால் டிக்கெட் பாிசோதகரும் இவா்களை கண்டிப்பதில்லை.மேலும் இரயிலில் பயணித்து கழிவறையை நாசம் செய்து சுகாதரசீர்கேடு எற்படுத்தி  இரயிலை சீரழிக்கின்றனர்.இதனால் கழிவு நீர் ரயிலாக மாறி வருகிறது வைகை ரயில்.எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சுகாதரமான பாதுகாப்பான பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு  வழங்க வேண்டும் என இரயில்வே பயணிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!