தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மே 15 இரவு காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக மாறியது. இது நேற்று இரவு புயலாக உருவானது.
இப்புயல் இன்று வட மேற்கு திசை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இப்புயல் இன்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. பின்னர் திசை மாற்றி வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 20 ஆம் தேதி அன்று மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் ஒட்டிய பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை2ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 40- 50 கி. மீ., வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.