காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மனிதாபிமான செயலுக்கு சென்னை கமிஷனர் ஏ. கே .விஸ்வநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலக G5 காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.எச் சாலை அருகே செல்லும்போது ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்திரிக்கிறார்காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்தபோது அவரின் பெண்ணான ஷீலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏதாவது கிடைக்குமா? என்று பார்க்க இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நம்மாழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். 108 க்கு கால் செய்து ஆம்புலன்ஸ் வர செய்துள்ளார். ஆனால் அந்தத் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால் இவரது போலீஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனையில் ஷீலாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் செய்த உதவிக்காக காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை ஷீலாவின் குடும்பம் தமிழக மக்கள் அனைவரும் பாராட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!