25வருடங்களாக சமுதாய பணி செய்து வரும் காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இராமேஸ்வரத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழக அளவில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நாளைய கலாம் விருதும், மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணித்து வாழும் ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருதும், சிறந்த சமூகப் பணி செய்யும் சமூக சேவகர்களுக்கு சமுதாயச் சிற்பி விருதும், சமூகப் பணிகளுக்கு பின்புலமாக இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதும் வழங்கப்பட்டது
.
.இந்நிகழ்வை தலைமையேற்று விழாவைத் தொடங்கி வைத்து அழகப்பா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சொ. சுப்பையா நாளைய கலாம் விருதுகளும் வழங்கினார்.உலக நட்புறவு மையத் தலைவா் கலைமாமணி. அரிமா. டாக்டர் கோ.மணிலால் வாழ்த்துரை வழங்கி கலாம் விருதுகளும்,திரைப்பட நடிகர் தாமு சிகரம் சதீஷ் சமுதாயச்சிற்பி விருதுகளும் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் உலக அமைதிக்காக நாடு செழிக்க வேண்டி தமிழகம் முழுவதும் ஆயிரம் இளைஞர்களை ஒன்றிணைத்து ஆயிரம் புறாக்களை ஒரே நொடியில் பறக்க விட்டு மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது…இந்நிகழ்ச்சியை சென்னை உயர்நீதி மன்ற சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க தலைவர் .பார்வேந்தன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்மாநில ஒருங்கிணைப்பாளர் தனிமரக்காடு சம்பத்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்உலக சாதனையை வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம்,நிறுவனர்டாக்டர்
A. கலைவாணி TRIUMPH உலக சாதனை ஆய்வு மையம்,முக்தா பிரதாப் JETLEE உலக சாதனை ஆய்வு மையம்Dr. Dragon A.Jetlee ஆகியோா் உலக சாதனையாக அங்கீகரித்தனர்..இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் தனிமரக்காடு சம்பத்குமார் அவர்களுக்கு கலாம் நளதம் விருதும்,கலாம் உலக சாதனை விருதும், உலக சாதனை ஒருங்கிணைத்ததற்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கலாம் உலக சாதனை விருதும் அதில் பங்கேற்ற ஆயிரம் நபர்களுக்கும் தரம் வாய்ந்த உலக சாதனை பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.காஞ்சி முத்தமிழ் மைய நிறுவனர், இயக்குநர் டாக்டர் லாரன்ஸ் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.விழாவின் முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தனிமரக்காடு சம்பத்குமார் நன்றியுரை வழங்கினார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












