ஆர். எஸ். மங்கலம் ஜமாபந்தி: தாமதமாக வந்த அதிகாரியால் மக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான இன்று, வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வரும் நிலையில், இறுதி நாளான இன்று அவர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த தாமதம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பின்னர், தாமதமாக வந்த வருவாய் கோட்டாட்சியர், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இருப்பினும், மக்களைக் காக்க வைத்து காலதாமதமாக வரும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!