பூட்டிய வீட்டை உடைத்து தடையமின்றி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையன்.! ஊரு விட்டு ஊரு மாநிலம் வீட்டு மாநிலம் தேடி சென்று கைது செய்த போலீசாரின் தரமான சம்பவம்.!!
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அமிர்தா நகரில் தனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்வதால், தனது மகனுடன் ‘லோக அம்பாள்’ என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 12.04.2025-ம் தேதி இரவு 09.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை சுமார் 06.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்வாசல் இரும்புக்கேட் பூட்டு உடைக்கப்பட்டு பின்வாசல் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், பின்பு உள்ளே சென்று கதவை திறந்து பார்த்த போது பெட்ரூமிற்கு உள்ளே இருந்த பீரோ கதவு திறந்து இருந்த நிலையில், அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்ததாகவும், மேலும்,சேலைக்குள் வைத்திருந்த உருண்டை செயின் மாடல் 3 1/2 சவரன் தங்க நெக்லஸ் ஒன்றும், சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருந்த 7 கிராம் தங்க மோதிரம் -1ம், 3 கிராம் தங்க தோடு ஒரு ஜோடியும் மற்றும் 4 கிராம் தங்க கல் தோடு ஒரு ஜோடியும் மொத்தம் 5 1/4 (ஐந்தே கால்) சவரன் தங்க நகைகளை யாரோ திருடி சென்றுவிட்டதாக 13.04.25-ம் தேதி அன்று கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தங்க ஈஸ்வர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இருந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் எந்த தடையும் கிடைக்காததால் குற்றவாளியை கண்டறிவதில் போலீசார் மிகவும் சிறையில் சிரமம் அடைந்து வந்தனர் இந்த நிலையில் ஒரு சிறு க்ளூவாக கைரேகையை வைத்து தேடி வந்தனர். அப்பொழுது இந்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமி ஆந்திரா பகுதியில் சிக்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று வேலூர் சைதாப்பேட்டையை சார்ந்த ‘ஸகீல்’ என்பவரை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.