சமுதாயத்தில் உதவி செய்வது பல வகை. அதில் நம்மைப் போன்ற சக மனிதருக்கு உதவுதல் நற்செயல். ஆனால், தான் என்ன செய்கிறோம் என்பதையே அறிய முடியாத நிலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் மாபெரும் அறப்பணியாகும்.
இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து, அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் மட்டுமின்றி குளிப்பாட்டுதல், முடிவெட்டி விடுதல் போன்ற பணிகளை எவ்வித அருவெருப்புமின்றி கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறது *PVM காப்பகம். இந்த காப்பகத்தில் சாதி, மதம் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற ஒற்றை குறிக்கோளுடன் 75 நபர்களின் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.
இளைஞர்கள் என்றால் பொறுப்பற்றவர்கள், ஊதாரியாக செலவு செய்யக்கூடியவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் இருக்கும் நிலையில், கீழக்கரையைச் சார்ந்த இளைஞர்கள் கடந்த வாரம் இந்த PVM காப்பகத்திற்கு சென்று, அவர்களுக்கு உணவளித்து, அவர்களோடு உறவாடி தங்களது சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்கள்.
இத்தூயப்பணியில் ஈடுபட்டு வரும் இக்காப்பகம், முழு வசதியில்லாத கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. இத்தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வாவின் கட்ட பங்களிப்பு தொகையாக ரூ. ஐந்து லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மண்ணில் புரளும் மக்களுக்கு உதவி செய்வது இறைச் செயலாகும். ஆகையால் உதவ விரும்பும் நல்லுல்லங்களின் உதவியை எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












