புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாநகரம் மற்றும் நேரு நினைவு கல்லூரியும் இணைந்து
சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம் நடத்தியது.
கல்லூரியின் தலைவர் பொறியாளர். பொன். பாலசுப்பிரமணியம் கருத்தரங்கத்தை தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் சாந்தி மற்றும்
பேராசிரியர் முனைவர் க. சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் திருவெள்ளரை பகுதியை சேர்ந்த முருகேசன் மாநகர செயலாளர் மனோகர் ஆகியோர் அறிவியல் இயக்கம் அதன் வேலைகள் குறித்து சிற்றுரையாற்றினர்.
மாநில கருத்தாளர் சகஸ்ரநாமம் நழுவு படக்காட்சியை தமிழில் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கம் அளித்தார் .இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 90 பேர் கலந்து கொண்டனர்.
மேற்சொன்ன நிகழ்வுகள் முடிந்ததும் மாநில மையத்தில் இருந்து தருவிக்கப்பட்ட டார்வின் குறித்த பிரச்சார கையேடு மற்றும் டார்வின் முகமூடியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









