அதிமுக கூட்டணியில் தான் புரட்சி பாரதம் உள்ளது. வட மாவட்டங்களில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம் – புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி..
புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக இன்று 46 வது துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய குடியாட்சி கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒய்எம்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி;
இந்த முறை மாணவரணி நடத்த கேட்டு கொண்டதால் இன்று கருத்தரங்காக நடைபெற்றுவருகிறது.
1978 ஆம் ஆண்டு அம்பேத்கர் மாற்றமாக உருவாக்கப்பட்டது இன்று புரட்சி பாரதமாக வளர்ந்து நிழல் தரும் மரமாக வளர்ந்து இருக்கிறது.
சமீபத்திய காலத்தில் தெலுங்கானா மாநிலத்தில் அம்பேத்கருக்கு பெரிய சாலை அமைத்து பெருமை படுத்தினார்கள்.
ஆந்திர மாநிலத்திலும் அம்பேத்கருக்கு 200 அடி சிலை திறந்து பெருமை படுத்தினார்கள்.
இரண்டு மாநிலத்தையும் புரட்சி பாரதம் பாராட்டுகிறது.
அதேபோல் தமிழகத்தில் இது போன்ற அம்பேத்கர் சிலையை இரண்டு பேர் வைத்ததை விட மிகப் பெரிய சிலை வைக்குமா? என்று கேள்வி வைக்கின்றோம்.
இன்று தமிழகத்தில் சாதி பிரச்சினையும் மத பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
வேங்கை வயல் பிரச்சினை இன்னும் கூட குற்றவாளிகளை பிடிக்கவில்லை மேலும்,
வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண்ணை சித்தரவதை செய்த சம்பவம் மிகப்பெரிய கண்டனத்திற்குரியதாகும் திமுக எம்எல்ஏ மகன் இது போன்ற தவறுகள் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டு இருக்கிறார் இந்த கொலை வெறியோடு தாக்குதல் நடந்திருப்பது அரசின் அலட்சியப் போக்கும் தவறு செய்த காவல் துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிமுக கூட்டணியில் தான் புரட்சி பாரதம் உள்ளது.. வட மாவட்டங்களில் 3 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும்
தமிழ்நாட்டில் யார் மாநாடு நடத்தினால் அவர்களுக்கு வழிகாட்டியாக புரட்சி பாரதம் கட்சி இருக்கும்.
தயவு செய்து புரட்சி பாரதம் கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் இந்த தாய் அமைப்பிற்கு வர வேண்டும். என்பது எங்களுடைய விருப்பம் என கூறியுள்ளார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









