தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை..

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவரின் 308-வது பிறந்த நாள் 01.09.2023 வெள்ளிக் கிழமை தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள மாமன்னர் பூலித்தேவன் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், முன்னாள் மாவட்ட கழக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லத்துரை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், புளியங்குடி நகர்மன்ற தலைவியும் தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான விஜயா செளந்திரபாண்டியன், கடையநல்லூர் நகரக் கழக திமுக செயலாளர் அப்பாஸ், யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முகமது அலி, நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் உட்பட கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகழகத்தின் சார் பணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!