புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடல் தமுமுக-காவல்துறை இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.



தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததன் அடிப்படையில், அவரின் உடலை திருநெல்வேலி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறை களமிறங்கியது. அந்த உடலுக்கு யாரும் உரிமை கொள்ளாத நிலையில், அந்த உடலை தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் புளியங்குடி காவல் துறை இணைந்து நல்லடக்கம் செய்தனர். இந்த பணியில் காவல் துறையோடு இணைந்து தமுமுக நகர தலைவர் செய்யது அலி பாதுஷா, தமுமுக நகர செயலாளர் அசன், தமுமுக நகர துணைச் செயலாளர் அனீஸ், மமக நகர துணைச் செயலாளர் அஜீஸ் மற்றும் அசன், சுல்தான், சாகுல் ஹமீது, முகமது அவுலியா ஆகியோர் ஈடுபட்டனர்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.