தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திங்கட்கிழமை குறைதீர் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில்தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் அம்மன் கோவில் தெரு சேர்ந்த ஆறுமுகம், (54) நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.கடந்த மாதம் 18.07.2019 மற்றும் அதனை தொடர்ந்த நாட்களில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை உட்பட்ட போலிசார் வந்து என் மகனை விசாரித்து விட்டு “உன் மகனை ஒழுங்கா இருக்க சொல்லுங்கள் இல்லையென்றால் குடும்பதோட கம்பி என்ன வேண்டியிருக்கும் என மிரட்டி விட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து நான் மற்றும் என் மனைவி, என் மூத்த மகன், மற்றும் மகளுடன் வெளியூர் சென்று விட்டோம்.கடந்த 25.07.2019 அன்று குலையன்கரிசல் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தப் போது எனது வீட்டின் கதவு,ஜன்னல்,கட்டில், பீரோ,வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதன பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு கிடந்தது.இது தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்களிடம் விசாரித்தப் போது சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை உட்பட்ட சில போலிசார் வந்து உங்களது வீட்டையும் உடமைகளையும் அடித்து நொறுக்கியதாக கூறினர்.இதனை தொடர்ந்து நொறுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சாட்சிக்காக புகைப்படம் எடுத்து வைத்து உள்ளேன்.
தற்போது நானும் என் குடும்பத்தாரும் வாழ இடமின்றி தவிப்பதோடு அனைத்து உடமைகளையும் இழந்து தவித்து வருகிறோம்.மேற்படி என் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வீட்டின் பொருட்களை அடித்து நொறுக்கியது மிகவும் மனித உரிமை மீறலான செயலாகும். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமலை உட்பட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுப்பதோடு எனது வாழ்விற்கான இழப்பீடுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









