புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி 58 வயது பெரியநாயகி இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை அழைத்து வருவதற்காக வீட்டில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பெரிய நாயகி வராததால் சந்தேகம் அடைந்த அவளது மருமகள் 33 வயது முத்துலட்சுமி தேடிச்சென்றுள்ளார் அப்பொழுது வயலில் நெற்றியில் பலத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவரது கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிச் செயின் மூக்குத்தி ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது இது குறித்து புகார் பேரில் வெள்ளலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்று விசாரணை செய்து வருகின்றனர் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You must be logged in to post a comment.