ராமநாதபுரம் அருகே உள்ள புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி சார்பாக மதுரை ஊமச்சிகுளம் தனியார் மஹாலில் இரண்டாவது தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் 10 வயதுக்குட்பட்ட கட்டா கராத்தே பிரிவில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளன. முன்னதாக போட்டியினை, முன்னாள் ஏடிஎஸ்பிக்கள் குமாரவேல், சந்தானம் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியில்,52 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர். சாதனை படைத்த புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர் – மாணவியர்கள் ஆபிக்கா மரியம், ரூபன், ரூபினி, ஹாகேஷ், பால சக்தி, முகமது கைஃப், விமல், முகமது ஹுமைத், அபுல் ஹைசம் ஆகியோருக்கு வெற்றி கேடயங்களை கராத்தே சம்மேளன தலைவர் வனராஜா வழங்கி கௌரவித்தார்.சாதனை படைத்த மாணாக்கர்களையும், பூன் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகத்தினர், பயிற்சியளித்த மாஸ்டரையும் பெற்றோர்கள், விளையாட்டு – சமூக ஆர்வலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Very Soon…
You must be logged in to post a comment.