கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் சார்பாக பயணிகள் நிழற்குடை..

கீழக்கரை ஊர் எல்லையான முக்குரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இங்கு பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை அமைத்து தர பல நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்,

இந்நிலையில் கீழக்கரையில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிமை அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அந்த பேருந்து நிறுத்தத்தை பார்வையிட்டு தனது சொந்த செலவில் பயணிகளுக்கு பந்தல் போட்டு கொடுத்தார், இது பற்றி அவர் கூறியதாவது, “இங்கு மக்கள் அன்றாடம் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் முதியோர்கள், பெண்கள் உட்காருவதற்கு தின்னை கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர், தற்போது நாங்கள் கீழக்கரையில் உள்ள தன்னார்வலர்கள் தில்லை ரஹ்மான், புதுத்தெரு பாதுஷா, அனைத்து ஜமாத் செயலாளர் சேக்உசேன், ரோட்டரி சுந்தரம், மூர் அசனுதீன், நியாஸ், ஜீவானந்தம், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் ரவிசங்கர் உதவியுடன் தற்காலிக பந்தல் அமைத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் நம் மக்களுக்கு நிரந்த நிழற்குடை, இருக்கை வசதி மற்றும் குடிதண்ணீர் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!