திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம்.
திமுக கழக இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பகுதிச் செயலாளர் மணிவேல் அவர்கள் தலைமை வகித்தார்
இந்தக் கூட்டத்தில் கழக இளைஞரணி துணைச் செயலாளர் ஈரோடு
கே.இ. பிரகாஷ் எம்.பி , மாநகரச் செயலாளர் மதிவாணன் தலைமைக் கழக பேச்சாளர்
குமரி பிரபாகரன் அவர்களும் சிறப்புரையாற்றினார். கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் வட்டக் கழகச் செயலாளர்கள் கலியமூர்த்தி மகாலிங்கம் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.