இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் .நல்லகண்ணு நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கோசிமின் வரவேற்பு உரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி தொடக்க உரையாற்றினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் கோ. சக்திவேல் ,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ,விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம். சீனி. முருகையன் ,விவசாய சங்க தேசிய குழு பன்னீர்செல்வம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினர் இராமலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் ,,விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அய்யா கண்ணு ,ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுக் கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள், இந்திய கூட்டணி கட்சியினர் திராளக கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் நன்றி உரை கூறினார், பொதுக் கூட்த்திற்கு முன்னதாக புதுச்சேரி ஆதிராமன் கோமாளி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

You must be logged in to post a comment.