விக்கிரமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி சேர்ந்த கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி தனது ஊராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.  ஆனால்கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க விடாமல் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் இங்கே உள்ள 600 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இக்கிராம மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த மாதம் காலி குளத்துடன் பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அப்போதுஇங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் ரோடு மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.அதிகாரிகள் உறுதியளித்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் கீழப்பட்டி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் இடம் கிராமத்திற்கு குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.  இது குறித்து கிராம மக்கள் தெரிவித்த போதுதனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக போர்வெல் இயங்கவிடாமல் செய்வது  கிராம மக்களின் அத்தியாவசிய தேவையை தடுப்பது போல உள்ளது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!