பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன்!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கிருந்து அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த மீண்டும் அந்தந்த பகுதிகளுக்கு அழைத்து சென்று விடுவதற்கும் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், வகுப்பறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தேர்வுக்கு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


You must be logged in to post a comment.