கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது
தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கி குளிக்கவோ அல்லது விளையாடவோ வேண்டாம் என நகராட்சி ஆணையர் அமுதா தடை விதித்துள்ளார்
ஆனால் பொதுமக்கள் தடையை மீறி மீண்டும் நீர் நிலைகளில் ஒன்று கூடி விடுகின்றனர் இதனால் விபத்து ஏற்படாமல் இருக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் காவல்துறை உயிர் காப்பு குழு இங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ளனர்
எனவே பொதுமக்கள் நீர் நிலைகளை பயன்படுத்தவும், குளிக்கவும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்
You must be logged in to post a comment.