தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..

மதுரை: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத்த லைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி,திமுக வட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, தொகுதி மக்களிடம் அளித்த வாக்குறுதியின் படி சட்டமன்ற உறுப்பினராக தனது செயல்பாட்டை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருகிறார்.

அதன்படி, மதுரை சிம்மக்கல், அண்ணாமலை திரை அரங்கம் அருகே திருமலைராயர் படித்துறை, எல் என் பி அக்ரஹாரம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பர் 2022  முதல் மே 2023 உள்ளிட்ட 6 மாதத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை வீதி வீதியாக சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வழங்கினார் .

அப்போது , தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!