ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாடார் பேட்டையில் Pssj மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பள்ளியில் தாளாளர் கார்த்திக் தலைமையில் நாடார் பேட்டை தலைவர் மாடசாமி கல்வி குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் கிருபாகரசேகரன் , வழக்கறிஞர் தேவ பிரீத்தி தினகரன் , வேலு மனோகரன் கலைக் கல்லூரி பேராசிரியர் சுதா தாசின்பீவி அப்துல் காதர் கல்லூரி பேராசிரியர் விசாலாட்சி , எஸ்தர் செந்தில் குமார் முதுகலை ஆசிரியர் ஜெய் சங்கர் ஆசிரியர் சேர்மத்தாய்வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சுரேஸ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் நிர்வாகிகள் நாக ஜோதி முருகரேவதி சுரேஸ் கண்ணன் நாணல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் . ஸ்போக்கன் இங்கிலிஷ் முதல்வர் நன்றியுரை வழங்கினார். பாலகிருஷ்ணன் லயன்ஸ் கிளப் பொருளாளர் கலந்து கொண்டவர்கள் சுந்தரபாண்டியன் அழகர்சாமி ராஜேஷ் ராஜா மற்றும் பெற்றோர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






You must be logged in to post a comment.