ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் இணைந்து கீழக்கரை சார்பு ஆய்வாளர் வீர கணேசிடம் வழங்கினார். மேலும் கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 68 கேமராக்கள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 38 கேமராக்கள் கிடைத்துள்ளதாகவும் 30 கேமராக்கள் தேவை இருப்பதால் தன்னார்வலர்கள் செல்வந்தர்கள் முன்வந்து வழங்குமாறு சார்பு ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்தார்

You must be logged in to post a comment.