இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது . அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலுவை கடல் தொழிலாளர் சங்கம் அமைப்பினர் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது முறையாக அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வழக்கறிஞர் அமைத்து உங்கள் கோரிக்கையை வலியுறுத்தப்படும் என்றும் தேர்தல் நெருங்குவதால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி செந்தில் நன்றி கூறினார். ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் , தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் கணேசன், திருப்பாலைக்குடி தமிழ் காளி, மோர்ப்பண்ணை இராஜதுரை, பாசிப்பட்டிணம் ஆறுமுகம் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.







Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









