ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவில் ‘ஆழிகுடி’ குரூப் கிராம உதவியாளராக பணிவாற்றி வருபவர் சுதாகர்.
இவரை கடந்த சில நாட்களுக்கு முன்புதொண்டி அருகே வீர சங்கிலி மடம் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது சின்னத் தொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன், ஆகியோர்முன் விரோதம் காரணமாக சேர்ந்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுதாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் கிராம உதவியாளர்கள் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் இரண்டு தாலுகாவை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.