SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மதுரை தெற்குவாசல் (பள்ளிவாசல்) பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் M.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தனார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செ.கு.உறுப்பினர் A.முஜிபுர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில து.பொ.செயலாளர் வெ.கனியமுதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தமிழ்தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் மாவட்ட செயலாளர் M.நிஸ்தார் அஹமது, வழக்கறிஞர் பால் பிரிட்டோ ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், உலாமா பெருமக்கள், மதசார்பற்ற கட்சிகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இறுதியாக மதுரை மேற்கு தொகுதி தலைவர் தேங்காய்ப்பால் சாகுல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
You must be logged in to post a comment.