தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் 27.02.2019 இன்று சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் நாராயணசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதோடு கண்டன உரையும் நிகழ்த்தினார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.