தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பட்டியலில் பல மாற்றுத் திறனாளிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
எனவே, அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 2000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி 500 ரூபாய் சேர்த்து 2500 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை பாதுகாக்க தவறிய மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரை கண்டித்தும்,பழனி பேருந்து நிலையம் முன்பாக இன்று (27.02.19) இன்று காலை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 600 மாற்றுத் திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பங்கேற்றனர். பழனி நகர செயலாளர் தங்கவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், உயரம் தடைபட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.