நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டம் 26.02.19 செவ்வாய் அன்று நடைபெற்றது.
சலவைத் தொழிலாளர்களை தாழ்த்தபட்டோர் பட்டியலில் சேர்த்திடவும், அதுவரை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3சதவீதம் இட ஒதுக்கீடு,இலவச வீட்டுமனைபட்டா, இஸ்திரிபெட்டி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சலவைத் தொழிலாளர்கள் உண்ணாவிரத கோரிக்கை போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.