தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர், பெற்றோர் போர்க்கொடி..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்கட்டான்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஈராசியர் பள்ளியான இங்கு தலைமை ஆசிரியைக்கும், உதவி ஆசிரியைக்கும் இடையே விரோத மனப்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் 21/02/2019இல் ஆசிரியையை, தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பாடம் நடத்தும் போது உதவி ஆசிரியை மென்மை போக்கு மாணவர்களை கவர்ந்துள்ளது.

இதனால் உதவி ஆசிரியையை தாக்கிய தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர்கள் 22/02/2019 ல் வகுப்புகளை புறக்கணித்தனர். தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்யக் கோரி வெங்கட்டான்குறிச்சி பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களுடன் வந்து இன்று (25/02/2019) நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு கொடுத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!