மதுரை விமான நிலையத்திற்கு தேவர் சூட்டக்கோரி மதுரையில் நடைபெறும் போராட்டத்திற்கு இராமநாதபுரத்திலும் ஆதரவு..

இராமநாதபுரத்தில் அனைத்து தேவரின முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (15/02/19) நடைபெற்றது. மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார். அகில இந்திய பெடரல் பிளாக் தலைவர் ஆனந்தமுருகன், முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை, தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேசன், முக்குல தேவர் முன்னேற்ற சங்க தலைவர் வீரபெருமாள், ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில் மணி பாண்டியன், மனித உரிமை காக்கும் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் பேசினர்.

ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பசும்பொன் தேவர் தியாக வரலாற்றை முழுமையாக அச்சிடவேண்டும். டிஎன்டி என சாதிச் சான்று வழங்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.20 இல் மதுரையில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மதுரை செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 2வது வாரத்தில் ராமநாதபுரத்திலும் முழு அடைப்பு பேராட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!