வத்தலக்குண்டு அருகே கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

வத்தலக்குண்டு அருகே கிராம மக்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது அய்யங்கோவில்பட்டி இங்கு 115 குடும்பங்கள் உள்ளன சுமார் 250 வசிக்கின்றனர் இங்கு கடந்த 2013ம் ஆண்டு எடுத்த கணக்கு படி வறுமை கோட்டிற்கு கீழ் 92 பேர் இருந்தனர். ஆனால் இப்போது கணக்குபடி வறுமை கோட்டிற்கு கீழ் 60 பேரே உள்ளனர்.

இந்த குளறுபடியை கண்டித்து ஊர் மக்கள் 50 பெண்கள் உள்பட 100 பேர் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கிருந்த அலுவலர்கள் இது பற்றி திண்டுக்கல் வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கேட்க வேண்டும் என்று விளக்கி கூறினர். அதை கிராம மக்கள் ஏற்கவில்லை. கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்ட போது வருவாய் ஆய்வாளரை கேட்கச் சொன்னார். வருவாய் ஆய்வாளரை போய் கேட்ட போது ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு போய் கேளுங்கள் என்றார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் உள்ள வாழ்வாதார இயக்க அலுவலத்தில் கேட்க சொல்கிறீர்கள் இனி எங்களால் அலைய முடியாது அந்த அதிகாரிகளை இங்கு வந்து விளக்கம் கூறச் சொல்லுங்கள் என்று தொடர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அரை மணி நேரத்திற்கு பிறகு வத்தலக்குண்டு போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!