உசிலம்பட்டி அருகே பொன்னையாபுரம் கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்த அரசு இடத்தை மீட்க கோரி கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றகையிட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொன்னையாபுரத்தில் அதே ஊரைச் சேர்நத சிலர் அரசு இடத்தை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துவருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பொன்னையாபுரம் கிராமமக்கள் பலமுறை அரசு இடத்தை மீட்க கோரி மனுஅளித்து வந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


You must be logged in to post a comment.