15/02/19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காத்திருக்கும் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பெற்று தமிழக அரசிடம் கூடுதல் நிது பெற்று இம்மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க ஏற்ப்பாடு செய்துள்ளார். ஆனால், ஆத்தூர் தாலுகாவில் மட்டும் அங்கு பணியாற்றும் சமூக நலத்துறை தாசில்தார் உதவித்தொகை வேண்டி காத்திருக்கும் பயனாளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்காத காரணத்தால் வெகு சிலருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து இம்மாதம் முதல் கிடைக்க வேண்டிய உதவித்தொகையை கிடைக்க விடாமல் பணியில் அலட்சியமாக இருந்த ஆத்தூர் சமூக நலத்துறை தாசில்தாரை கண்டித்தும், ஆத்தூர் தாலுகாவில் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆத்தூர் ஒன்றியக்குழுவின் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமாறு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திண்டுக்கல் குழு சார்பில் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.