தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னப்ப கொட்டாய், சாமியார் நகர், பூனையான் கொட்டாய் கிராமங்களில் உள்ளது. ஒவ்வொரு கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த மூன்று கிராமங்களில் குடிநீர் வராததால் பொதுமக்கள் ஆத்திரம் ஆத்திரமடைந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் முற்றுகை தொடர்ந்தது. பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் வந்து கிராம மக்களின் பிரச்சினைகளை கேட்டார். தங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை மினி டேங்க் போதுமான அளவுக்கு குடிநீர் வருவதில்லை, இதை பற்றி பலமுறை உங்களிடம் சொல்லியும் நீங்கள் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் ஊரில் கிளார்க்கு வருவது இல்லை நாங்கள் யாரிடம் போய் எங்கள் தண்ணீர் பிரச்சினை சொல்வது தெரியவில்லை, இதனால் ஆத்திரமடைந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டதாக விளக்கினர்.
பிறகு வட்டாட்சியர் ராமஜெயம் கிராம மக்களிடம் இன்னும் இரண்டு நாட்களில் உங்களுடைய தண்ணீர் பிரச்சினை தீரும் என்று சமரச வார்த்தை பேசி பிறகு கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












