வத்தலக்குண்டுவில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளி நடத்திய பள்ளிகள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தைப்பூசத்தை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்றுமாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார் ஆனால் வத்தலக்குண்டு விலுள்ள இரண்டு தனியார் பள்ளிகள் வழக்கம் போல் நடந்தது தகவலறிந்த இந்து முன்னணியினர் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அண்ணாத் துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரகுபதி, நகர தலைவர் மருதை வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதீய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்குமார் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் இந்|து முன்னணி நிர்வாகிகள் தங்கப்பாண்டி மருது’, சரவணன், முத்துச்சாமி உள்பட ஏராளமானோர். கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் அங்கு வந்து பள்ளியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









