மத்திய அரசின் தகவல் தொடர்பு துறையும் (Information & Broadcasting), TRAI (Telecommunications Regulatory Authority of India) எனும் தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமும் கேபிள் டிவி யில் எட்டாவது புதிய விலைப்பட்டியல் (New Tariff Order) எனும் கட்டண முறையை அறிவித்து உள்ளது . ஏற்கனவே இருந்து வந்த கட்டண முறையில் 150 கட்டண சேனல்கள் உட்பட 350 ற்கும் மேற்பட்டசேனல்கள் ரூபாய் 200 க்குள் வழங்கபட்டது. ஆனால் இந்த முறை மக்கள் விரும்பிய சானல்களை மட்டும் பார்க்கலாம் எனும் நோக்கத்தில் அறிவிக்க பட்டாலும் கூட முன்னணி ஆங்கில தமிழ் விளையாட்டு சானல்கள் தங்கள் கட்டணத்தை அதிக படியாக உயர்த்தி உள்ளது .இன்றய நிலையில் 200 ரூபாய்க்கு பார்க்கும் சானல்களை தனி தனியாக தேர்ந்தெடுத்து பார்த்தால் ரூ.600 க்கும் அதிகமாக வருவதோடு அதற்கான GST வரி 18% சேர்த்து வழங்கப்பட வேண்டும்.
மேலும், இலவச சானல்களாக 100 சானல்களை பார்க்க ரூ.130 மற்றும் வரியுடன் ரூ.153.50 செலுத்த வேண்டும் என போடப்பட்டுள்ள நிபந்தனைகள் பொது மக்களுக்கும் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கும் இடையே மிக பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். பொதுவாக கட்டண சானல்கள் தங்கள் சானல்களை அதிகமாக பெருக்கி கொண்டு அதை கட்டாய படுத்தி உள்புகுத்துவதே இதற்கான தடைகள். முன்னணி தமிழ் சேனல்களான சன் டிவி, கே டிவி, விஜய் டிவி,ஜீ டிவி, கலர் தமிழ் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஆசியாநெட் ஆகியவைகள் தனி தனியாக பார்க்க ரூ.12 முதல் ரூ.19 வரை வைத்துள்ளார்கள். அடிப்படை கட்டணம் ரூ.130 மற்றும் கூடவே இந்த சானல்களின் கட்டணம் தனி எனும் போது 25 வருட காலமாக நாங்கள் செய்து வரும் தொழிலுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். செய்தி சானல்களுக்கு 25 பைசா கட்டண விதிக்கும் அதே நிறுவனம் மக்கள் அதிகம் பார்க்கும் சானல்களுக்கு அதிக கட்டணம் வைத்துள்ளது பாரபட்சமானது. மேலும் இவ்வாறு அதிக கட்டணம் விதித்துள்ள சேனல்கள் ஏற்கனவே விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றன. அனலாக் எனும் பழைய முறை மாறி புதிய முறை டிஜிட்டல் அமலாக்கம் முழுமையாக செய்து முடிப்பதற்குள் திணிக்கப்பட்டுள்ள இந்த புதிய விலைக் கொள்கை திட்டம் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானது. அனலாக் எனும் பழைய முறை மாறி புதிய முறை டிஜிட்டல் அமலாக்கம் முழுமையாக செய்து முடிப்பதற்குள் திணிக்கப்பட்டுள்ள இந்த புதிய விலைக் கொள்கை திட்டம் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானது.
பொது மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து கட்டண சானல்களிடம் கொடுப்பதை மக்களோடு இணைந்து சேவை செய்யும் கேபிள் ஆப்ரேட்டருக்கு உடன்பாடு இல்லை என்பதால் எங்கள் முதல் கட்ட போராட்டமாக மத்திய தகவல் தொடர்பு துறைக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட தபால் தந்தி துறை அதிகாரியிடம் கீழ்கண்ட கோரிக்கையை வழங்குகிறோம்.
இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களோடு சேர்ந்து அதிக கட்டணத்தை அறிவித்து உள்ள சானல்களை புறங்கணிப்பது போன்ற அடுத்த கட்ட போராட்டங்களை செய்ய இருக்கிறோம்.
கோரிக்கைகள்:-
– கட்டண சேனல்களின் கட்டணங்களை கட்டுக்குள் கொண்டு வந்து மிக குறைந்த கட்டணத்தை அறிவிக்க வேண்டும்
– பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள GST வரியை 18% சதவிகிதத்தில் இருந்து 5% சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
– தமிழக அரசிடம் கஜா புயலினால் கடுமையாக பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், கேபிள் டிவிக்கு தள வாடகை ரத்து செய்யவும் வேண்டும் என்றும் முடக்கப்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் நலவாரியத்தை செயல் படுத்த வேண்டும்.
– முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கனவு திட்டமான கேபிள் டிவியில் மக்களுக்கு குறைவான விலையில் அரசு கேபிள் வழியாக வழங்க வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசின் தவறான கொள்கையால் மக்கள் அவதியுறுவதை மாநில முதல்வர் தலையிட்டு தடுத்திட வேண்டும்.
என்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர் மேலும் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் துத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரபு மற்றும் மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
செய்தியாளர் – அஹமத் ஜான்
புகைப்படம் – சாதிக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









