கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பணியிட மாறுதலுக்கான வரையறையை தளர்த்த வேண்டும். அஞ்சல் வங்கி பணிக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும். அனைத்து அலுவலருக்கும் 8 மணி நேரம் பணியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. கோவில்பட்டியில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிளை துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பிச்சையா, பொருளாளர் பட்டுராஜன், கிளை துணை செயலாளர் நாறும்பூநாதன், பழனிமுத்து, செல்வராஜ், முத்துகாமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
செய்தி:- அஹமது


You must be logged in to post a comment.