மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்டிபிஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஒபுளாபடித்துரை பகுதியில் நடைபெற்றது.
கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷய்புஃல்லா கண்டன கோஷம் முழங்கினார். இறுதியாக தெற்கு தொகுதி செயலாளர் சம்சு அப்துல்லா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வக்ஃப் திருத்த சட்ட நகலை எரித்து,தங்களது கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
You must be logged in to post a comment.