மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கருக்கட்டான்பட்டி காலணி பகுதியில் 200க்கும் அதிகமான பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.,
இந்த மக்களுக்கு முறையான பொதுக் கழிப்பறை இல்லாததால் பொது வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதாக கூறப்படுகிறது., குடியிருப்புகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் பொதுக் கழிப்பறை அமைத்து தர சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.,
தற்போது வரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றவிடாமல் பெண்கள் முற்றுக்கையிட்டு தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத சூழலில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் தேசிய கொடியை ஏற்றினார்.,
தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் பொதுக் கழிப்பறை அமைத்து தர நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.,
You must be logged in to post a comment.