கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் போனஸ் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என தமிழக முழுவதும் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையொட்டி தஞ்சையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசி டியு மாவட்ட தலைவர் கே .ராஜன் தலைமை வழங்கிய தலைமை வகித்தார்.ஏஐசிசிடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயபால் ,நடராஜன் , அல்போன்ஸ் ,ஏ ஐ சி டபிள்யூ எஃப் நகர குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) சிபிஐ(எம்எல்) தஞ்சை மாநகர செயலாளர் எஸ். எம். ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினா.சிபிஐ (எம்எல் )மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி சிறப்புரை ஆற்றினார் .சிபிஐ (எம்எல்) மாநகர குழு உறுப்பினர்கள் சூரி ரவிச்சந்திரன்,அல்போன்ஸ், மாரியப்பன் ,ரமேஷ் , ரவிச்சந்திரன், செல்வகுமார் ,கணபதி, ரவிச்சந்திரன், புனித ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.