இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதலால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
அதிக கனமழை, இயற்கை இடர்களால் பாதித்த நெல் பயிருக்கு 100 விழுக்காடு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
தொடர்மழையால் பாதித்த மிளகாய் சாகுபடி ஏக்கருக்கு நிவாரணம் ரூ.25 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். முதுகுளத்தூர் வட்டாரத்தில் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு தாமதிக்காமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம், பாதித்த விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தலைவர் எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன், செந்தில்குமார், காளிராஜா உள்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல், மிளகாய் செடிகளுடன் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.