இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர் கார் மேகம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக செயலாளர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். அமித் ஷா மன்னிப்பு கேட்க கோரி திமுகவினர் கண்டன கோஷம் எழுப்பினர். திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, வடக்கு நகர் அவைத் தலைவர் சைபுதீன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா, கவுன்சிலர்கள் ஸ்டாலின் நவநீத கிருஷ்ணன், ஜஹாங்கீர், காளிதாஸ், தொமுச மாவட்ட செலயாளர் மலைக்கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தங்கச்சிமடத்தில் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் சேசு மிக்கேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம், மாவட்ட பிரதிநிதி சந்தானம், ராஜகுமார், ராபர்ட், பிலோமின், முஸ்தபா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.