இராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். 70,000 காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை கல்வித் தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ரூ. 3000 தொகுப்பூயத்தில் சத்துணவு ஊழியர்கள் நியமனம் செய்வதை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதி 313 ஐ அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டன் நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர் தனலட்சுமி, மாநில செயற்கு உறுப்பினர் ஜெயராணி, முன்னாள் மாவட்ட பொருளாளர்கள் அம்பிராஜ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.